கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :839 days ago
கோவை; மதுக்கரை பகுதியில் உள்ள மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கும் நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் மற்றும் நந்தியம் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.