உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் கோயில் உண்டியல் காணிக்கை 4.98 கோடி ரூபாய்!

திருச்செந்தூர் கோயில் உண்டியல் காணிக்கை 4.98 கோடி ரூபாய்!

திருச்செந்தூர் : திருச்செந்துர் சுப்பிரமணியசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 4.98 கோடியை தாண்டியது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாதம் இருமுறை உண்டியல் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி கோயிலில் 44 நாட்களில் 4.98 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூல் ஆகியுள்ளது. தங்கம் 3400 கிராம், வெள்ளி 54500 கிராம், வெளிநாட்டு கரன்சி 851ம் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன. இந்த உண்டியல் எண்ணிக்கையின் போது வங்கி பணியாளர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !