உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

சென்னை; திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் பௌர்ணமி வெள்ளிக்கிழமை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இங்கு இன்று பௌர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். வெயிலில் தாக்கம் அதிகம் இருந்ததால் குடை பிடித்தபடி பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !