ஆனி சனிக்கிழமை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :824 days ago
கோவை ; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாதம் இரண்டாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.