காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் இன்று காலை மற்றும் மாலையில் சங்கடஹர சதுர்த்தி கணபதி ஹோம விரதம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 850 மேற்பட்ட பக்தர்கள் டிக்கெட் பெற்று கலந்து கொண்டனர். இந்த பூஜையில் கோயில் துணை செயல் அலுவலர் வித்யாசாகர் ரெட்டி மற்றும் கோயில் அதிகாரிகள் கோதண்டபாணி மற்றும் திரளான பக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதே போல் ஸ்ரீ காளகஸ்தி சிவன் கோயிலிலும் சங்கடஹர சதுர்த்தி விரதப் பூஜைகள் நடைபெற்றது கோயில் வளாகத்தில் உள்ள அஞ்சி அஞ்சி விநாயகர் சன்னதி எதிரில் முன்னதாக கோயில் அர்ச்சகர்கள் ஹோமம் பூஜைகளை செய்ததோடு கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு சுவாமிக்கு பல்வேறு சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப தூப ஆராதனைகள் செய்து நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது.இதில் கோயில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.