பில்லாலி தொட்டி மகரிஷி அருட் பீடத்தில் சிறப்பு பூஜை
ADDED :503 days ago
கடலுார்; பில்லாலி தொட்டி மகரிஷி அருட் பீடத்தில், திருவோண நட்சத்திர சிறப்பு பூஜைகள் நடந்தது. கடலுார், திருவந்திபுரம் பில்லாலி தொட்டி சுகப்பிரம்ம மகரிஷி அருட் பீடத்தில் ஆனி மாத திருவோண நட்சத்திரம் மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுகப்பிரம்ம மகரிஷி, மார்கண்டேயர் சாமிக்கு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. திருமணத் தடை நீங்கவும், வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம் கிடைக்கவும் சிறப்பு அர்ச்சனை, ேஹாமம் நடந்தது. ஏற்பாடுகளை சபரி குருக்கள், சம்பத்குமார் குருக்கள் செய்திருந்தனர். திருப்பதி திவ்ய பிரபந்த கைங்கர்யதாரர் பாலாஜி, பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீராம் உட்பட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.