உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்குண்டு அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

செங்குண்டு அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

மேலூர்; அரிட்டாபட்டியில் செங்குண்டு அய்யனார் ஆனிமாத புரவி எடுப்பு திருவிழா நேற்று நடந்தது. பக்தர்கள் சார்பில் செய்யப்பட்ட ஒரு புரவியை வெள்ளச்சி ஆயி அம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக செங்குண்டு அய்யனார் கோயிலுக்கு கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (ஜூன் 26) அரிட்டாபட்டியில் உள்ள மழட்டழகி தர்மம் என்னும் குளத்தில் பெண்கள் புதிய மண்பானையில் தீர்த்தம் எடுத்து வந்து வெள்ளச்சி அம்மன் கோயில் முன்பு 300 க்கும் மேற்பட்ட கோழிகளை வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், நாளை (ஜூன் 27) மீண்டும் மழட்டழகி தர்மத்தில் தீர்த்தம் எடுத்து வந்து வீட்டுகளரி சுவாமி கும்பிடும் நிகழ்ச்சியும் நடைபெறும். இவ்விழாவில் அரிட்டாபட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர். இத் திருவிழா 34 வருடங்களுக்கு பிறகு கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !