கொல்லந்தோப்பு முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா
ADDED :502 days ago
பெரியபட்டினம்; பெரியபட்டினம் அருகே கொல்லந்தோப்பில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 85ம் ஆண்டு முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. கடந்த ஜூன் 15 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் இரவில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று இரவு மூலவர் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இன்று காலை சர்வ சந்தன காப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் காட்சி தந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கும்மி கொட்டப்பட்டு, முளைப்பாரி ஊர்வலம் ஊரணி கரையில் கங்கை சேர்க்கப்பட்டது. ஏற்பாடுகளை கொல்லந்தோப்பு கிராம பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.