உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி மாரியம்மன் கோவிலில் ஆனி திருவிழா; பக்தர்கள் தரிசனம்

சக்தி மாரியம்மன் கோவிலில் ஆனி திருவிழா; பக்தர்கள் தரிசனம்

சூலூர்; அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில், ஆனி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

சூலூர் அடுத்த அப்பநாயக்கன் பட்டியில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு, ஆனி மாத திருவிழா கோலாகலமாக நடந்தது. நேற்று அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்த்து. தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். கோவில் கமிட்டியினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !