கள்ளக்குறிச்சி விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
ADDED :502 days ago
கள்ளக்குறிச்சி; அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிேஷகம் செய்து வைக்கப்பட்டது. மூலவர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைத்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில், பக்தர்கள் பலர் பங்கேற்று வழிபட்டனர். கோவில் நிர்வாகத்தினர் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் கள்ளக்குறிச்சி பகுதி அனைத்து விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தி நடந்தது.