உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் பத்ராசல ராமர், வெண்ணையால் உருவாக்கப்பட் அனுமார் தரிசனம்; பக்தர்கள் பரவசம்

சென்னையில் பத்ராசல ராமர், வெண்ணையால் உருவாக்கப்பட் அனுமார் தரிசனம்; பக்தர்கள் பரவசம்

சென்னை; தி.நகரில் இன்று 28ம் தேதி முதல் 30ம் தேதிவரை நடைபெறும் பக்த பாத சேவா அறக்கட்ளை சார்பில் ஸ்ரீ பத்ராசல ராமர் தர்ஷனம் மற்றும் 20 அடி உயர 100 கிலோ வெண்ணை கொண்டு உருவாக்கப்பட்ட அனுமார் சிலையை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 


சென்னையில் முதல் முறையாக “ஸ்ரீ பத்ராசல ராமர் தரிசனம் இன்று 28ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஜீன் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை  நடைபெறுகிறது. சென்னை, தி.நகர், ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கல்யாண மண்டபத்தில் ஸ்ரீ பத்ராசல ராமர் மற்றும் 20 அடி உயர 100 கிலோ வெண்ணை கொண்டு உருவாக்கப்பட்ட அனுமாரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று சுமார் 1008 புடவையினால் சீதாதேவிக்கு மாபெரும் முறையில் அர்ச்சனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும் மற்றும் புத்ரகாமேஷ்டி யாகம், சீதா கல்யாணம், ராம பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது.  விழா ஏற்பாடுகளை பக்த பாத சேவா அறக்கட்டளை செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !