தேய்பிறை அஷ்டமி; புஷ்ப அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலிப்பு
ADDED :623 days ago
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் கம்பீர விநாயகர் கோவிலில் உள்ள காலபைரவர் சன்னிதியில் ஆனி தேய்பிறை அஷ்டமி தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலபைரவர் சன்னிதியில் பைரவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரம் மற்றும் வடை மாலை அலங்காரத்துடன் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை தரிசனம் செய்தனர்.