உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனுார் கோவிலில் ரூ.74 லட்சம் உண்டியல் வசூல்

மேல்மலையனுார் கோவிலில் ரூ.74 லட்சம் உண்டியல் வசூல்

செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 74 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை ஒவ்வொரு மாதமும் எண்ணி வருகின்றனர். இந்த மாத உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், துணை ஆணையர் சிவலிங்கம், அறங்காவலர் குழு தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 74 லட்சத்து 17,570 ரூபாய் ரொக்கப்பணத்தையும், 243 கிராம் தங்க நகைகளையும், 1,505 கிராம் வெள்ளி பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இதில் அறங்காவலர்கள் மதியழகன், ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சங்கீதா, கண்காணிப்பாளர் வேலு, மேலாளர் மணி மற்றும் கோவில் ஊழியர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !