விஜயநாராயணம் ஒத்தப்பனை சுடலை கோயில் கொடை விழா
ADDED :552 days ago
நான்குநேரி; விஜயநாராயணம் ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழா நடந்தது. நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தில் ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் கோயில் கொடை விழா நடப்பது வழக்கம். அதுபோல் நேற்று கோயில் கொடை விழா நடந்தது. விழாவில் நேற்று காலைசிறப்பு பூஜை, மதியம் சுவாமிக்கு சிறப்பு அன்னப் படைப்பு, தீபாராதனை, மதியம் 3.30 மணிக்கு மனோன்மணீஸ்வரர் சிவன் கோயிலிலிருந்து பால்குடம் வீதி உலா, தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. இரவு சிறப்பு தீபாராதனை, நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு கிடா வெட்டுதல், சுவாமி மயானம் சென்று வருதல் கனியான் கைவெட்டு பூஜைநடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.