ஆனி சனிக்கிழமை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :802 days ago
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் துளசி மற்றும் புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் மூலவர் கரி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.