ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :625 days ago
ராமேஸ்வரம்; விடுமுறை நாள் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று தமிழகத்தின் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். பின் கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் திட்டக்குடி, கோயில் மேல ரதவீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.