நெல்லிக்குப்பம் ஐயனாரப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
ADDED :543 days ago
கடலூர்; நெல்லிக்குப்பம், வெள்ளப்பாக்கம் ஐயனாரப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் வெள்ளப்பாக்கம் ஐயனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை முன்னதாக சிறப்பு வழிபாடு, யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, ஐயனாரப்பனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.