உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலுார் நாராயணி அம்மன் கோவிலில் சுவாமிக்கு 1,000 தங்கக்காசுகளில் உடை

வேலுார் நாராயணி அம்மன் கோவிலில் சுவாமிக்கு 1,000 தங்கக்காசுகளில் உடை

வேலுார்; வேலுார், நாராயணி  அம்மன் தங்க கோவிலில், லலிதா சகஸ்ர நாம மஹா யாகம், 1,000 நாட்கள் நடந்தது. நேற்று நிறைவு விழாவில், மஹாலட்சுமி அம்மனுக்கு, 6 கிலோ எடைகொண்ட, 1,000 தங்க காசுகளால் ஆன பாவாடை அணிவிக்கப்பட்டது. வேலுார் மாவட்டம், அரியூர் தங்க கோவிலில், நாராயணி அம்மன் கோவிலில் கடந்த, 2021 அக்., 6 ம் தேதி துவங்கப்பட்டு, லலிதா சகஸ்ர நாமம் மஹா யாகம், 3 ஆண்டுகளாக, 1,000 நாட்கள் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று  நிறைவு நாள் விழா  நடந்தது. நிகழ்ச்சியில் சக்தி அம்மா சிறப்பு பூஜை நடத்தினார். இதில், மகாலட்சுமி அம்மனுக்கு, 6 கிலோ தங்கத்திலான, 1,000 தங்கக்காசுகள் கொண்ட தங்கப்பாவாடை அம்மனுக்கு சாத்தப்பட்டது. இதை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !