பழமையான மணிகண்டேஸ்வரர் கோவில் கோபுரம் மீது இடி தாக்கி சிலை சேதம்
ADDED :477 days ago
ராணிப்பேட்டை; ராணிப்பேட்டை அடுத்த வாழப்பந்தலில், 1,000 ஆண்டு பழமையான மணிகண்டேஸ்வரர் கோவில் கோபுரத்தின் மீது இடி தாக்கியதில், சிலை சேதமடைந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த வாழப்பந்தல் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மணிகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, கோவில் கருவறை கோபுரம் மீது இடி தாக்கியது. இதில் கோபுரத்திலிருந்த, 2 சிலைகள் உடைந்து சேதமானது. மேலும், கோபுரத்தில் கூடுகட்டி வசித்த, 10 புறாக்கள் பலியாகின.