மேலும் செய்திகள்
அரங்கநாதர் கோவில் தேருக்கு ‘ஷெட்’ இல்லை
433 days ago
ஆரோக்கிய அன்னை தேர்பவனி
433 days ago
கடலுார்; கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. இதனையொட்டி பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனைகள் நடந்தன. மாலை பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 23 வகையான வாசனாதி திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நந்தி பகவானுக்கு மலர்கள் மற்றும் அருகம்புல் மாலை, வில்வ மாலை சாற்றி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் பிரதோஷ சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
433 days ago
433 days ago