/
கோயில்கள் செய்திகள் / சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை ஆரத்தி பூஜை; செந்தாமரம் வீசி பக்தர்கள் வழிபாடு
சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை ஆரத்தி பூஜை; செந்தாமரம் வீசி பக்தர்கள் வழிபாடு
ADDED :575 days ago
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டி சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை ஆரத்தி பூஜை, அன்னதானம், சப்பர பவனி நடந்தது.
இதையொட்டி இன்று அதிகாலை ஆரத்தி பூஜையில் பக்தர்கள் தங்களது கைகளாலேயே சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்து செந்தாமரம் வீசி பூஜை செய்தனர். மதியம் நெய் தீபம் ஏற்றி ஆரத்தி பூஜை நடந்தது. பின் சாய்பாபாவிற்கு காணிக்கை புத்தாடை அணிவித்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. மாலை ஆரத்தி பூஜை நடத்தப்பட்டு சாய்பாபா கோயிலிலிருந்து சப்பர பவனி நடந்தது. தொடர்ந்து காலை11:30 மணி முதல் மாலை வரை அன்னதானம் நடந்தது. திண்டுக்கல், நத்தம், செந்துறை, கோபால்பட்டி, உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசித்தனர்.