நத்தம் சந்தனக்கருப்பு சுவாமி கோவிலில் பாலாலய பூஜை
ADDED :497 days ago
நத்தம், நத்தம் சந்தனகருப்பு சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடந்த பாலாலய பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நத்தம் பகுதியில் பிரசித்தி பெற்ற சந்தனக்கருப்பு சுவாமி கோவிலில் கல்சிலை அமைக்கப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவில் வளாகத்தில் இன்று பாலாலய பூஜைகள் நடந்தது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், எஜமான சங்கல்பம், பஞ்சகவ்ய பூஜை, கலச பூஜை, யாக வேள்விகள், பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் சந்தனக்கருப்பு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள், வண்ணப்பூ அலங்கார பூஜைகள் நடந்தது. பின்னர் கோவில் திருப்பணி வேலைகள் தொடங்கியது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.