உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோயிலில் சிறப்பு யாகம்; லிங்கத்திற்கு விசேஷ பூஜை

சிவன் கோயிலில் சிறப்பு யாகம்; லிங்கத்திற்கு விசேஷ பூஜை

ஒட்டன்சத்திரம்; விருப்பாச்சி தலையூற்று ஸ்ரீ நாக விசாலாட்சி அம்பிகா சமேத விருப்பாட்சேஸ்வரர் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. அம்மனுக்கும் சிவ லிங்கத்திற்கும் விசேஷ பூஜைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தங்கச்சியம்மாபட்டி கரைமாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !