உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா

கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா

சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே உள்ள கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவில் லகு வாராகி ஹோமம் மற்றும் அன்னதானம் நடந்தது.

ஆஷாட நவராத்திரி விழாவில் லகு வாராஹி ஹோமம் நடந்தது. இதில் காப்பு கட்டிய ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இன்று அஸ்வாரூடா வாராஹி ஹோமம், சிம்ாருட வாராஹி ஹோமம், ஜூலை.10 பஞ்சமி திதி அன்று ஊஞ்சல் உற்சவம் விளக்கு பூஜை நடைபெற உள்ளது. தொடர்ந்து தினமும் அன்னதானம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை வரசித்தி வாராஹி அம்மன் கோயில் பீடாதிபதி சஞ்சீவி சாமிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !