உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை

கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை

கோவை; பெரியகன்பாளையம்அருகே உள்ள ஜோதிபுரத்தில் இருக்கும் தண்டு மாரியம்மன் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை 24-ம் ஆண்டு விழா நடந்தது. இதில் முதல் நிகழ்வாக காலை 5:30 மணிக்கு திருவாசக ஞான வேள்வி வழிபாடு அதைத்தொடர்ந்து காலை 9 மணி அளவில் திருமஞ்சன அபிஷேகம் அதைத்தொடர்ந்துபெரும் பேரொளி வழிபாடு நடந்தது. இதில் மாணிக்கவாசகரின் உருவ சிலைக்கு அலங்காரம் வந்த செய்யப்பட்டு சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !