உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழக கோயில் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது?ஏதேனும் திட்டம் உள்ளதா? உச்சநீதிமன்றம் கேள்வி

தமிழக கோயில் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது?ஏதேனும் திட்டம் உள்ளதா? உச்சநீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோயில் நிதிகளில் முறைகேடுகள் நடக்கிறது. பெரும்பாலான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்க வில்லை. கோவில் நிதியை அறநிலையத்துறைக்கு மாற்றியதை திரும்ப வழங்க வேண்டும் என ஆலயம் காப்போம் என்ற அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. 


இது குறித்து உச்சநீதிமன்றம் கூறியதாவது; தமிழக கோயில் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது? உண்டியல் காணிக்கை, நிதியை செலவிட ஏதேனும் திட்டம் உள்ளதா? சமூக நல திட்டங்களுக்கு நிதியை பயன்படுத்தினால் பிரச்னை இல்லை; சொகுசு காரியங்களுக்காக நிதியை அரசு பயன்படுத்தினால் தவறு எனவும் தெரிவித்துள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !