உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி சிறப்பு பூஜை

உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி சிறப்பு பூஜை

உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஒன்பது நாட்கள் நடக்கும் ஆஷாட நவராத்திரி துவக்க விழா ஜூலை 6ல் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.


உலக நன்மைக்காக நடக்கும் கூட்டு வழிபாட்டில் மானாமதுரை ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம் மற்றும் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் இணைந்து ஆஷாட நவராத்திரியை கொண்டாடுகின்றனர். ஜூலை 6ல் துவங்கி 15 வரை தினந்தோறும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள், காய், கனிகள், கிழங்குகள் பல்வேறு வகை பட்டு மற்றும் வஸ்திரங்களால் சிறப்பு அலங்காரங்கள் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !