உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

நெல்லிக்குப்பம் செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

திருப்போரூர்; திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் ஊராட்சியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செல்வவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சிறியதாகவும், பழுதடைந்தும் இருந்தது. எனவே, கோவிலை அகற்றி விரிவுபடுத்தி கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி பாலாலயம் செய்து, திருப்பணிகள் துவங்கப்பட்டது. புதிதாக கோவில், விமானம், மஹா மண்டபம் அமைக்கப்பட்டு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. பணிகள் முடிவுற்று, கடந்த 8ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை 7:30 மணிக்கு நான்காம் கால ஹோமம், பூர்ணாஹுதி முடிந்து, புனித நீர் கலசங்கள் மேள தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. காலை 10:00 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு செல்வவிநாயகர் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !