உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் மாகாளிக்குடி மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

சமயபுரம் மாகாளிக்குடி மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருச்சி; சமயபுரம் மாகாளிக்குடி கிராமத்தில் உள்ளது மகாமாரியம்மன் கோயில். இந்த கோயிலில் மதுரை வீரன், கருப்பண்ணசாமி, பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன் ஆகியோருக்கு புதிய கோவில் கட்டி முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இன்று காலை சிவாச்சாரியார்களால் கோபுர கலசத்திற்கு புனித நீர்  ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக  நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !