சங்கரன்கோவில் சங்கர நாராயணர் சுவாமி கோவிலில் ஆடித்தபசு கொடியேற்றத்துடன் துவக்கம்
திருநெல்வேலி; தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணர் சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.வரும் 19ல் தேரோட்டமும் 21ல் தபசு காட்சியும் நடக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் பிரசித்திபெற்ற சங்கர நாராயண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா நடக்கிறது.இந்தாண்டு ஆடித்தபசு திருவிழா, இன்று 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் கோமதி அம்பாள் காலை, மாலை என இருவேளையிலும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருகிறார், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வரும் 19ம் தேதி தேரோட்டம் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித் தபசு திருவிழா 21ம் தேதி நடக்கிறது. அன்று கோமதி அம்பாளுக்கு, சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி தரும் முதல் காட்சியும், இரவு சிவலிங்கமாக காட்சி தரும் இரண்டாம் காட்சியும் நடக்கிறது. ஆடித்தபசை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதையொட்டி, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.