சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :528 days ago
சேலம்; ஆனித்திருமஞ்சனத்தை முன்னிட்டு, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நடராஜர், சிவகாமி அம்மாளுக்கு பால், மஞ்சள், விபூதி, அபிஷேகம் நடந்தது.
சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், நேற்று, நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு, அதிகாலை முதல் சிறப்பு பூஜை நடந்தது. கோவிலில் நடராஜர் சுவாமி, சிவகாமி அம்மனுக்கு அனைத்து வித சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, தீபாராதனை காட்டப்பட்டது. பின், சுவாமிகள் கோவில் வளாகத்திற்குள் அழைத்து வரப்பட்டன. சுவாமிகள், 4 வீதிகளில் திருவீதி உலா நடக்க உள்ளது.