வடமதுரை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :557 days ago
வடமதுரை; வடமதுரை வி.சித்தூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி ஜூலை 10 காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய விழாவில் 4 கால யாக பூஜைகளை தொடர்ந்து இன்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஸ்தானிகர் ஆனந்தகுமார் சிவம் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தினர். சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனர்.