காஞ்சிபுரம் மாகாளேஸ்வரர் கோவிலில் உழவார பணி
ADDED :470 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில், 2006ல் துவக்கப்பட்ட திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப் பணி அறக்கட்டளையினர், 17 ஆண்டுகளாக, ஒவ்வொரு மாதமும், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில், தமிழகத்தில் உள்ள சைவ, வைணவ கோவிலில் சென்று உழவாரப் பணி செய்து வருகின்றனர். அறக்கட்டளையின் 18வது ஆண்டு துவக்க விழா மற்றும் ஜூலை மாதத்திற்கான உழவாரப் பணி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் பின்புறம் உள்ள மாகாளேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்தது. இதில், உழவாரப் பணி குழுவினர், கோவில் வளாகத்தில் புதர்போல மண்டிகிடந்த செடி, கொடிகளை அகற்றினர். தீபம் ஏற்றுமிடத்தில் இருந்த எண்ணெய் பிசுக்கு மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்தனர். முன்னதாக மூலவர் மாகாளேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.