உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநீறு பூசினால் சுத்தம்!

திருநீறு பூசினால் சுத்தம்!

அபிஷேகப்பிரியனான பரமேஸ்வரன் விபூதிபிரியனும் ஆவான். காடுடைய சுடலைப் பொடி பூசி என்று தேவாரத்தின் முதல் பாட்டிலேயே ஞானசம்பந்தக் குழந்தை சொல்லயிருக்கிற மாதிரி, ஸ்வாமி இட்டுக் கொள்வது மயானத்தில் சவங்களை எரித்துப் பெறுகிற பஸ்மாவே (சாம்பலே). ஆனாலும், நாம் விபூதி தயாரித்து அவனுக்கு இட்டுவிட்டு, அபிஷேகம் கூடப் பண்ணி நமக்கும் இட்டுக் கொள்கிறோமே அது எங்கேயிருந்து வருகிறது? கோமய உருண்டைகளைப் புடம் போட்டுத் தான் விபூதி பண்ணுவது. விபூதியை விடப் பவித்ரமானது ஒன்று கிடையாது. மந்திரமாவது நீறு என்ற பதிகத்தை பார்த்தால் போதும், அந்த திருநீற்றுக்கு என்னவெல்லாம் மகிமை இருக்கிறதென்று தெரியும். பஸ்மஜாபாலோபநிஷத் என்ற உபநிஷத்தில்
பரமேஸ்வரனே கோமயத்தில் இருந்து எப்படி விபூதி செய்வது என்று விளக்கமாகச் சொல்லி, அது சர்வ பாவங்களையும் போக்கி மோக்ஷம் தருவது என்று சொல்வதாக இருக்கிறது. கோவின்(பசுவின்) மலத்துக்கே அப்படிப்பட்ட நிர்மல சக்தி இருக்கிறது. நம்மைச் சுத்தம் செய்து கொள்வதற்கு இரண்டு வழி தான் இருக்கிறது. ஒன்று ஸ்நானம் பண்ணுவது. இன்னொன்று விபூதி அணிந்து கொள்வது! -விளக்குகிறார் பெரியவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !