/
கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம்
ADDED :419 days ago
ராமேஸ்வரம்; ராமநாதசுவாமி கோயிலில் காஞ்சி காமகோடி மடம் பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்தார். இதற்காக நேற்றிரவு 8:00 மணிக்கு ராமேஸ்வரம் காஞ்சி சங்கர மடத்திற்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வந்தார். அவருக்கு மடத்தின் நிர்வாகிகள், பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு அவர் ஆசி வழங்கினார். இன்று காலை 10:00 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறகு பக்தர்கள் புடைசூழ ராமேஸ்வரம் காஞ்சி மடம் வந்தார். மாலை 5:00 மணிக்கு காஞ்சிபுரம் புறப்பட்டு செல்கிறார்.