பெருங்கரை ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் ஆஷாட நவராத்திரி விழா
ADDED :418 days ago
பரமக்குடி; பரமக்குடி அருகே பெருங்கரை ஆதிபராசக்தி ராஜராஜேஸ்வரி சக்தி பீடத்தில் ஆஷாட நவராத்திரி விழா நடந்தது. இக்கோயிலில் அருள் பாலிக்கும் வராகி அம்மனுக்கு ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. தினமும் அபிஷேக ஆராதனைகள் நடந்து மலர் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பிரசாதங்கள் அம்மனுக்கு படைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.