திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் தங்க கருட சேவை வீதியுலா
ADDED :469 days ago
கடலுார்; கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் தங்க கருட சேவை வீதியுலா நடந்தது. கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில், கடந்த 13ம் தேதிபிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தங்க கருடசேவை வீதியுலா உற்சவம் நடந்தது. வரதராஜபெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை (19ம் தேதி) காலை திருக்கல்யாண உற்சவம், மாலை சூர்ணாபிேஷகம், 108 கலச திருமஞ்சனமும், 20ம் தேதி வெண்ணெய்த்தாழி உற்சவம் மற்றும்வேடுபறி உற்சவம் நடக்கிறது. 21ம் தேதி காலை 7:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.