உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு தேரோட்டம் கோலாகலம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு தேரோட்டம் கோலாகலம்

தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு விழா கடந்த 11ம்தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் அம்பாள் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்த அருள்பாலித்து வருகிறார். விழாவில் இன்று இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து, தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான சங்கரலிங்கசுவாமி கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு காட்சி நாளை மறுதினம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !