உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; மதுக்கரை அருகே உள்ள மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆடி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில்  மூலவர் சிவபெருமானுக்கு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் தர்மலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர். இன்று மாலை துவங்கும் பவுர்ணமி கிரிவலத்திற்காக பக்தர்கள் குவிந்து வருகின்றனர். காத்திருந்து மலை மேல் சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !