திருவோண விரதம்; கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :443 days ago
கோவை; உக்கடம் கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதில் ஸ்ரீதேவி -பூதேவி சமேதராய் புஷ்ப அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.