மேல்மாம்பட்டு ஐயனாரப்பன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED :445 days ago
பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தில் ஐயனாரப்பன் கோவில் மகாகும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தில் 200 ஆண்டுகால பழமையான ஸ்ரீ பூரணி பொற்கலை சமேத ஸ்ரீ ஐயனாரப்பன், வீரபத்ர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரவியின் மீது அமர்ந்த ஐயனாரப்பனின் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கியது. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து, காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி கும்பாபிேஷகம் நடந்தது. விழாவில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.