மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா
ADDED :524 days ago
மதுரை; காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியை மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் 3 நாட்களாக சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நிறைவு நாளான நேற்று காலை 7.00 மணிக்கு மஹன்யாஸ பூர்வ ருத்ரைகாதசினி ஜபம் ஹோமம் நடந்தது. சுவாமிகளின் விக்ரகத்திற்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சொற்பொழிவாற்றினார். ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் டி. ராமசுப்ரமணியன். செயலாளர் வெங்கடேசன். பொருளாளர் வெங்கட்ராமணி, நிர்வாகிகள் ஸ்ரீ குமார், ஸ்ரீ ராமன், ராமகிருஷ்ணன்.செய்திருந்தனர்.