உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேத்துப்பட்டு பச்சையம்மன் கோவிலில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

சேத்துப்பட்டு பச்சையம்மன் கோவிலில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

திருவண்ணாமலை; சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் வனப்பகுதியில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயிவில் நடந்த  குண்டம் விழாவில் விரதம் இருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம், வனப்பகுதியில் உள்ள மன்னர் சுவாமி பச்சையம்மன், கோவிலில் ஆடி குண்டம் திருவிழா, பச்சையம்மனுக்கு காப்பு கட்டுடன் சிறப்பாக தொடங்கியது.தொடர்ந்து பெருமாள் உற்சவம், மாரியம்மனுக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி, பால்குட ஊர்வலம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக பச்சையம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் தீ குண்டம் அமைத்தனர். இதில் விரதம் இருந்த பக்தர்கள் அருகில் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், ஆரணி, ஆற்காடு, வேலூர், குடியாத்தம், என சுற்றுப்புற நகரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !