ஓரிக்கை மஹா பெரியவர் மணி மண்டபத்தில் விஜயேந்திரர் சாதுர்மாஸ்ய விரதம்
ADDED :543 days ago
காஞ்சிபுரம்; காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஓரிக்கையில் மஹா பெரியவர் மணி மண்டபத்தில் இன்று முதல், செப்., 18ம் தேதி வரை, சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடிக்கிறார். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த வாரம் புனித யாத்திரையாக, ராமேஸ்வரம், திருவாணைக்காவல் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். நேற்று, காஞ்சிபுரம் திரும்பிய அவர், ஓரிக்கை மஹா பெரியவர் மணி மண்டபத்தில் சந்திரமவுலீஸ்வரர் பூஜையை தொடர்ந்தார். இன்று முதல், சாதுர்மாஸ்ய விரதத்தை துவக்கி, செப்., 18ம் தேதி நிறைவு செய்கிறார்.