பேட்டைகுளம் அக்னிவீரன், நல்லதங்காள் கோயில் உற்ஸவம்
ADDED :482 days ago
பாலமேடு; நத்தம் லிங்கவாடி அருகே வளையப்பட்டி பேட்டைகுளம் அக்னிவீரன் நல்லதங்காள் சாமி கோயில் உற்ஸவம் ஜூலை 22ல் துவங்கியது. முதல் நாள் மதுரை பொன்மேனியில் இருந்து அம்மன் அலங்கார பெட்டி எடுத்து அலங்காநல்லுார் அருகே உள்ள பெரிய ஊர்சேரி கிராமத்திற்கு வந்தனர். 2ம் நாள் புறப்பட்டு பேட்டைகுளம் அக்னிவீரன், நல்லதங்காள் கோயில் அடைந்தனர். பக்தர்கள் பூக்குழி இறங்கினர். மூன்றாம் நாள் அம்மனுக்கு பொங்கல் வழிபாடு, இன்று(ஜூலை 25) அம்மன் கரகம் கரைத்தல், அலங்காரப் பெட்டி பெரிய ஊர்சேரி புறப்பாடும், நாளை மதுரை பொன்மேனி கோயில் வீட்டிற்கு அலங்கார பெட்டி சென்றடைதல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் சாமியாடிகள், பெரியஊர்சேரி, பொன்மேனி, லிங்கவாடி, பெருமாள்பட்டி, புதுவிளாங்குடி, மேலப்பெருங்கரை பிள்ளைமார் உறவின்முறை மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.