பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்காக பாதையில் தடுப்புகள்
ADDED :482 days ago
சத்திரப்பட்டி; பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கான பாதையில் நடந்து நபர்கள் நலன் கருதி ஸ்டீல் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. பழநி வழியே திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதில் பழநிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. வேகமாக வரும் வாகனங்களில் இருந்து பாதையாத்திரை பக்தர்கள் பாதுகாக்கும் வகையில் ஸ்டீல் தடுப்புகள் பாதயாத்திரை பாதையில் ஓரங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.