கீழக்கரை அம்மன் கோயில்களில் ஆடி இரண்டாவது வெள்ளி உற்ஸவம்
ADDED :477 days ago
கீழக்கரை; ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நிறைவேற்றப்பட்டது. ஏராளமான பெண்கள் நெய் தீபமேற்றி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு கூழ்வார்க்கப்பட்டது.
* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மஞ்ச மாதாவிற்கு தனி சன்னதி அமைந்துள்ளது மூலவர் மஞ்ச மாதாவிற்கு 11 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்று எலுமிச்சை, மாவிளக்கு, தேங்காய் உள்ளிட்டவைகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.