நத்தம் கைலாசநாதர் கோவிலில் ஏக தின லட்சார்ச்சனை பூஜை
ADDED :477 days ago
நத்தம்; நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி லட்சார்ச்சனை பூஜை நடந்தது. இதையொட்டி இன்று காலையில் கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, அனுக்ஞை, துர்க்கா ஹோமம் நடந்தது. பின்னர் மஹாபூர்ணாகுதியை தொடர்ந்து செண்பகவல்லி அம்மனுக்கு ஏக தின லட்சார்ச்சனை பூஜை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் குருக்களும் செய்திருந்தனர்