அன்னூர் அங்காளம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :757 days ago
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் - தென்னம்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் வெள்ளிக் கவசத்துடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.