/
கோயில்கள் செய்திகள் / ஆடி செவ்வாய்; சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் புவனேஸ்வரி அம்மன் அருள்பாலிப்பு
ஆடி செவ்வாய்; சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் புவனேஸ்வரி அம்மன் அருள்பாலிப்பு
ADDED :756 days ago
கோவை; சுந்தராபுரம், காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் -1ல் உள்ள கம்பீர விநாயகர் கோவிலில் ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் மூலவர் புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் புவனேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.